டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் இலங்கை வீரர் ஹெராத்

தினகரன்  தினகரன்
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் இலங்கை வீரர் ஹெராத்

கொழும்பு: இலங்கை அணி வீரர் ரங்கனா ஹெராத் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்து வரும் ஹெராத் 1999-ம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 430 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் நவ.6-ம் தேதி துவங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். ஹெராத்தின் இந்த முடிவு இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஏன்னெனில் சுழற்பந்துவீச்சில் ஜாம்பவானாக இருந்த இலங்கையின் முத்தையா முரளிதரனின் ஓய்வுக்கு பின்னர் இவர் தான் சுழற்பந்துவீச்சில் ஜொலித்தார்.  கடந்த 8 வருடங்களில் இலங்கை அணி பங்கேற்ற 81 டெஸ்ட் போட்டிகளில் 70-ல் களமிறங்கி சுமார் 359 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஹெராத்தின் இந்த முடிவு சக வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை