பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியாவது குறித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு?

PARIS TAMIL  PARIS TAMIL
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியாவது குறித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு?

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியாவதன் தொடர்பில், இரண்டாவது பொதுவாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும் என்று ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தியுள்ளனர்.
 
லண்டனில் நடந்த அந்தப் பேரணியில், சுமார் 700,000 பேர் கலந்துகொண்டதாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அமைப்பு தெரிவித்தது.
 
அந்த விவகாரத்தின் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் உரிமையைப் பொதுமக்களுக்கு அளிக்கவேண்டும் என்று பேரணியில் கலந்துகொண்டோர் கூறினர்.
 
Brexit ஒப்பந்தத்தினால் ஏற்படக்கூடிய இழப்புகள், சிக்கல்கள் ஆகியவை பற்றிய புதிய தகவல்கள் வெளியான நிலையில், அது அவசியம் என்று அவர்கள் முறையிட்டனர்.
 
Brexit ஒப்பந்தத்தில் ஏற்படும் இழுபறி நிலை, பிரிட்டனின் எல்லைப் பகுதியில் மட்டுமின்றி அதன் பொருளியலுக்கும் பிரச்சினைகளை உண்டாக்கும் என்று பேரணியில் கலந்துகொண்டோர் கவலை தெரிவித்தனர்.
 
பிரிட்டனின் ஜனநாயக ஆட்சி முறையில் அந்தப் பேரணி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாய்த் திகழும் என்று லண்டனின் மேயர் சாதிக் கான் கூறினார்.
 

மூலக்கதை