டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் ஸ்விடோலினா அசத்தல்

தினகரன்  தினகரன்
டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் ஸ்விடோலினா அசத்தல்

சிங்கப்பூரில் நடைபெறும் டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் லீக் சுற்றில், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (6வது ரேங்க்) அபாரமாக வென்றார். செக் குடியரசின் பெத்ரா குவித்தோவாவுடன் (4வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்விடோலினா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 28 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.மற்றொரு லீக் ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்., 7வது ரேங்க்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் கரோலின் வோஸ்னியாக்கியை (டென்மார்க், 2வது ரேங்க்) வீழ்த்தினார். சீசன் முடிவு தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் மட்டும் இந்த தொடரில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை