இந்திய பெண்கள் மீண்டும் ஏமாற்றம் | அக்டோபர் 19, 2018

தினமலர்  தினமலர்
இந்திய பெண்கள் மீண்டும் ஏமாற்றம் | அக்டோபர் 19, 2018

மும்பை: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்திய பெண்கள் அணி தொடரை முழுமையாக இழந்தது.

இந்தியா ‘ஏ’ மற்றும் ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றன. முதலிரண்டு போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி 0–2 என ஏற்கனவே தொடரை இழந்துவிட்டது. மூன்றாவது போட்டி மும்பையில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு மோனா மெஷ்ராம் (57) அரைசதம் விளாசினார். அபாரமாக விளையாடிய பூனம் ராத் 98 ரன் சேர்த்தார். இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு ஜார்ஜியா (98) நல்ல துவக்கம் தந்தார். தஹில் மெக்ராத் (62), டூலே (67) கைகொடுக்கு வெற்றி உறுதியானது. ஆஸ்திரேலிய அணி 44.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை இந்திய அணி 0–3 என முழுமையாக பறிகொடுத்தது.

மூலக்கதை