சபரிமலை பிரச்னையால் பதட்டம் : கேரள டி.ஜி.பி., இன்ப சுற்றுலா

தினமலர்  தினமலர்
சபரிமலை பிரச்னையால் பதட்டம் : கேரள டி.ஜி.பி., இன்ப சுற்றுலா

மூணாறு: கேரளாவில் சபரிமலை பிரச்னை தொடர்பாக பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், அம்மாநில டி.ஜி.பி., லோக்நாத்பெஹ்கரா குடும்பத்தினருடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நாள் முதல் எதிர்ப்புகள் வலுத்து, கேரளா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. உச்சகட்டமாக ஐப்பசி மாத முதல் தேதிக்கு அக்., 17 ல் நடை திறக்கப்பட்ட நாள்முதல் சன்னிதானத்தை சுற்றி நிலக்கல், பம்பை உட்பட பல பகுதிகளில் போராட்டங்கள், போலீஸ் தடியடி சம்பவங்கள் நடக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவுகிறது. அதனை பொருட்படுத்தாமல் டி.ஜி.பி., லோக்நாத்பெஹ்ரா குடும்பத்தினருடன் நேற்று மூணாறுக்கு சுற்றுலா வந்தார். இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சென்றவர், போலீஸ் வாகனத்தில் இருந்தபடி குறிஞ்சி பூக்களை பார்த்தார். போலீஸ் ஆய்வு மாளிகையில் மதிய உணவுக்கு பின்னர், மூணாறில் இருந்து புறப்பட்டார்.

அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டது. மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் அளவு பிரச்னைகள் தலை துாக்கி உள்ள நிலையில், டி.ஜி.பி.,யின்சுற்றுலா பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை