'தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை'

தினமலர்  தினமலர்
தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை

கரூர்: ''தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு அரசு பஸ்களில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது,'' என, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி, போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமங்களை தவிர்க்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தனியார் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி சிறப்பு அரசு பஸ்களில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.சென்னை நகரில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து செல்வர். மேலும், சென்னையில் இருந்து, திருச்சி வரை, உள்ள டோல்கேட்களில், பஸ்கள் செல்ல தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அங்கு, போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார்கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.அதேபோல், மாநகராட்சி பகுதிகளில் உள்ள, பஸ் ஸ்டாண்ட்களில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவும் வகையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து அதிகாரிகள் பணியாற்ற உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை