வேதனையானது ராவண வதம்

தினகரன்  தினகரன்
வேதனையானது ராவண வதம்

20 ஆண்டாக விழா நடக்கிறது ரயில்வே தண்டவாளம் அருகேயுள்ள தனியார் இடத்தில் விழா நடப்பது பற்றி தகவல் தெரியாது என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், உள்ளூரைச் சேர்ந்த பல்விக்தர் என்பவர் கூறுகையில், ‘‘ஜோத பதக்கில் ரயில்வே இடத்துக்கு அருகேயுள்ள தனியார் இடத்தில் ராவணன் உருவ மொம்மை எரிக்கும் நிகழ்ச்சி கடந்த 20 ஆண்டுகளாக நடக்கிறது. இந்த வழியாக சென்ற மற்ற ரயில்கள் எல்லாம் மெதுவாக சென்றன. ஜலந்தரில் இருந்து வந்த ரயில் வேகமாக வந்ததால் மக்கள் மீது மோதியது’’ என்றார். 40 பேர் அடையாளம் தெரிந்ததுரயில் மோதியதில் பலியான 61 பேரில், 40 பேர் அடையாளம் காண்பபட்டுள்ளனர். இவர்களில் 36 உடல்கள் சோதனைக்கு பின் எரியூட்டப்பட்டன. காயம் அடைந்த 72 பேர் 7 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பார்த்து ஆறுதல் கூறினார். ராவணனாக நடித்தவரும் பலிஜோதா பதக்கில் நடந்த ராம்லீலா நிகழ்ச்சியில் தல்பிர் சிங் என்பவர் ராவணன் வேடமிட்டு நடித்தார். பின்னர், ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சியை பார்ப்பதற்காக  தண்டவாளத்தில் நின்றார். ரயில் மோதியதில் இவரும் பலியானார். இவருக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.37 ரயில்கள் ரத்துஅமிர்தசரஸ் ரயில் விபத்தை தொடர்ந்து இந்த வழியாக செல்லும் 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 27 பயணிகள் ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. 16 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. உலக தலைவர்கள் இரங்கல்பஞ்சாப் ரயில் விபத்து சம்பவத்துக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஐ.நா தலைவர் ஆன்டனியோ கட்டர்ஸ் டிவிட்டரில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘அமிர்தசரஸ் ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த மாத தொடக்கத்தில்தான் நான் பொற்கோயிலுக்கு சென்று, மக்களின் பெருந்தன்மையை நேரில் பார்வையிட்டேன். அமிர்தசரஸ் மக்களின் சோகத்தில் நானும் பங்கேற்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘எனது நினைவெல்லாம் அமிர்தசரஸ் சோக சம்பவத்தை பற்றியே உள்ளது. பலியானவர்களை எண்ணி வேதனைப்படும் கனடா மக்கள், காயம் அடைந்தவர்கள் பூர்ண குணம் அடைய வாழ்த்து தெரிவிக்கின்றனர்’ என கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் புடின் உட்பட உலக தலைவர்கள் பலரும் பஞ்சாய் ரயில் விபத்து சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். நெரிசலில் சிக்கி பலர் பலிதலையில் காயத்துடன் குருநானக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சப்னா என்ற பெண் கூறுகையில், ‘‘விபத்து நடக்கும் முன் ராவணன் எரிப்பு சம்பவத்தை வாட்ஸ் அப் வீடியோ மூலம் எனது கணவருக்கு ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தேன்.  உருவ பொம்மை எரிக்கப்பட்டதும், மேடை அருகே இருந்த மக்கள் விலகி ரயில்வே தண்டவாளம் நோக்கி நகர்ந்தனர். அப்போது, ஒரு ரயில் மெதுவாக வந்தது. அது வந்த பாதையில் இருந்த மக்கள், அடுத்த பாதைக்கு சென்றனர். இதனால், அங்கு நெரிசல் ஏற்பட்டது. அடுத்த சில நொடிகளில் எதிர்திசையில் வேகமாக வந்த ரயில் மக்கள் மீது பயங்கரமாக மோதி விட்டு சென்றது. வெடி சத்தத்தில் ரயிலின் ஹாரன் சத்தம் கேட்கவில்லை. வெளிச்சம் தெரிவதையும், அங்கு மக்கள் கூடி தங்கள் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்ததையும் ரயில் டிரைவர் பார்த்திருக்க வேண்டும். இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட எனது உறவினர் இருவர் பலியாயினர். அவர்கள் ரயில் மோதி இறக்கவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தனர். ஒரு குழந்தை கல்லில் அடிபட்டு இறந்தது. எனது தாயார் தப்பி ஓடியவர்கள் மிதித்து சென்றதில் இறந்தார்’’ என்றார். தேடி அலைந்த உறவினர்கள்ரயில் மோதி பலியானவர்களின் சடலங்கள் பல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. காயம் அடைந்தவர்களும் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், இவர்களை உறவினர்கள்  நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஒவ்வொரு மருத்துவமனையாக சென்று தேடினர். விஜய் குமார் என்பவரின் மகன்கள் மணீஷ், ஆசிஸ் ஆகியோர் தசரா விழாவுக்கு சென்றிருந்தனர். ஆசிஸ் பத்திரமாக வீடு திரும்பினான். மணீஷ் திரும்பவில்லை. இதனால், விஜயகுமார் ஒவ்வொரு மருத்துவமனையாக சென்று தனது மகனின் உடலை தேடினார். குருநானக் அரசு மருத்துவமனையில் அமர்ந்திருந்த அவருக்கு, வாட்ஸ் அப்-ல் நேற்று காலை 3 மணியளவில் உறவினர் ஒருவர் அனுப்பிய போட்டோ அவரது மகன் மணீஷ் இறந்ததை உறுதி செய்தது. அவருக்கு யாராலும் ஆறுதல் கூற முடியவில்லை.சித்து மனைவி மீது நடவடிக்கைஜோதா பதக்கில் நடந்த ராம்லீலாவுக்கு முன்னாள் இந்திய கிரக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் தலைமை தாங்கியுள்ளார். ரயில் மோதி காயமடைந்தவர்களை பற்றி கவலைப்படாமல் சம்பவ இடத்தை விட்டு சென்று விட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது பற்றி பஞ்சாப் மாநில பாஜ மூத்த தலைவர் ராஜிந்தர் மோகன் சிங் சின்னா கூறுகையில், ‘‘ராவணன் உருவபொம்மை எரிப்பதை பார்க்க தண்டவாளத்தில் மக்கள் நின்றது பற்றி தனக்கு தெரியாது என கவுர் கூறியுள்ளார்.   இந்த விவகாரத்தில் சித்துவும், அவரது மனைவியும் பொய் கூறி வருகின்றனர். இச்சம்பவத்துக்கு யார் பொறுப்பு என மேல்மட்டத்திலிருந்து கண்டறியப்பட வேண்டும். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்றார்.இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள்ரயில் ஏறியதில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பீகார் மற்றும் உபி. மாநில தொழிலாளர்கள் என்று தெரியவந்துள்ளது. பிழைப்பு தேடி பஞ்சாப் மாநிலத்துக்கு வந்திருந்த இவர்கள், ராவண வதம் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ரயில்வே டிராக்கில் நின்றிருந்தபோது இந்த சோகம் நடந்துள்ளது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.செல்போனும் காரணம்ராவணனை எரிக்கும் நிகழ்ச்சியை பலர் செல்போனில் செல்பி, போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதில் கவனம் செலுத்தினர். ரயில் பாதையில் நிற்கிறோம் என்ற பயமும் இல்லாமல் அவர்கள் செல்போனில் மூழ்கினர். இதனால், ரயில் வருவதை பெரும்பாலானோர் கவனிக்கவில்லை. பட்டாசு சத்தத்தில் ரயிலின் ஹாரன் சத்தமும் கேட்கவில்லை. இந்த விபத்தில் அதிகம் பேர் பலியானதற்கு செல்போனும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

மூலக்கதை