காஷ்மீர் மாநில நகராட்சி தேர்தல் தீவிரவாதம் அதிகம் பாதித்த 4 மாவட்டத்தில் பாஜ வெற்றி

தினகரன்  தினகரன்
காஷ்மீர் மாநில நகராட்சி தேர்தல் தீவிரவாதம் அதிகம் பாதித்த 4 மாவட்டத்தில் பாஜ வெற்றி

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த மாத தொடக்கத்தில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் ேநற்று எண்ணப்பட்டன. தீவிரவாதத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட அனந்த்நாக், குல்காம், புல்வாமா மற்றும் சோபியான் மாவட்டங்களில் உள்ள 20 நகராட்சி அமைப்புகளில் 4ல் பாஜ முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு மொத்தமுள்ள 132 வார்டுகளில் 53ல் பாஜ வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், 4 நகராட்சிகள் அதன் கைவசம் வந்துள்ளன. சோபியான் மாவட்டத்தில் பாஜ பிரமாண்ட வெற்றியை கண்டுள்ளது. குவாசிகந்த் நகராட்சியில் பாஜ தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆனால், லடாக் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் பாஜ வெற்றி பெறவில்லை. லே நகராட்சியில் மொத்தமுள்ள 13 இடங்களிலும் காங்கிரசே வெற்றி பெற்றுள்ளது. இங்கும் பாஜ.வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஜம்மு மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள  75 இடங்களில் பாஜ 43 இடங்களை  கைப்பற்றி தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. காங்கிரஸ் 14 இடங்களில் வென்றுள்ளது.

மூலக்கதை