பணத்திற்காகப் புற்றுநோய் இருப்பதாக ஏமாற்றிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை...!

PARIS TAMIL  PARIS TAMIL
பணத்திற்காகப் புற்றுநோய் இருப்பதாக ஏமாற்றிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை...!

ஆஸ்திரேலியாவில் பணத்திற்காகப் புற்றுநோய் இருப்பதாகச் சொன்ன பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 27 வயது லூசி வீலாண்ட் (Lucy Wieland) தனக்குக் கருப்பைப் புற்றுநோய் இருப்பதாகக் கூறி அதற்காக சிகிச்சை பெறப் பணம் தேவை என சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.
 
GoFundMe எனும் நன்கொடை வழங்கும் கணக்கு ஒன்றையும் அவர் அமைத்துக்கொண்டார்.
 
அவரின் நிலைமையை எண்ணி அனுதாபம் கொள்பவர்கள் அதன் வாயிலாக அவருக்குப் பணம் அனுப்பலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
பொதுமக்களில் ஒருவர் கொடுத்த தகவல்மூலம் காவல்துறை அதிகாரிகள் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். 
 
நம்பிக்கை மோசடி செய்ததாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 
 

மூலக்கதை