850 விவசாயிகளின் ரூ.5.50 கோடி கடனை செலுத்தினார் அமிதாப்

தினகரன்  தினகரன்
850 விவசாயிகளின் ரூ.5.50 கோடி கடனை செலுத்தினார் அமிதாப்

மும்பை: உத்தரபிரதேசத்தை சேர்ந்த 850 விவசாயிகள் வாங்கிய ரூ.5.50 கோடி கடனை வங்கியில், நடிகர் அமிதாப்பச்சன் செலுத்தியுள்ளார்.வங்கியில் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் கஷ்டப்படும் விவசாயிகள், உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு பிரபல நடிகர் அமிதாப்பச்சன்(76) நிதியுதவி செய்து வருகிறார். கடந்தாண்டு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 350 விவசாயிகளின் வங்கி கடனை திருப்பி செலுத்தினார். இந்நிலையில், இந்தாண்டு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 850 விவசாயிகளின் வங்கிக்கடனை  அமிதாப்பச்சன் திருப்பி செலுத்தியுள்ளார்.இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறுகையில், ‘‘வாங்கிய கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். விவசாயிகளின் நலன் கருதி, இந்தாண்டு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 850 விவசாயிகளை தேர்வு செய்து, அவர்களின் ரூ.5.50 கோடி மதிப்புள்ள கடனை வங்கியில் செலுத்தியுள்ளேன். விவசாயிகளின் கடனை அடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

மூலக்கதை