பத்திரிகையாளர் கொலை: சவுதி ஒப்புதல்

தினமலர்  தினமலர்
பத்திரிகையாளர் கொலை: சவுதி ஒப்புதல்

ரியாத்: பத்திரிகையாளர் ஜமால், துருக்கியில் உள்ள, தனது நாட்டு தூதரகத்தில் ஏற்பட்ட அடி தகராறில் இறந்து விட்டதாக சவுதி அரசு கூறியுள்ளது.

எச்சரிக்கை

வாஷிங்டன் போஸ்ட் இதழில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால். துருக்கியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யவிருந்தார். இரு வாரங்களுக்கு முன் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி துாதரகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இவ்வழக்கில் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமால் கொலை செய்யப்பட்டுவிட்டார் என வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் கூறியது. இது உறுதியானால் சவுதி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார். பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் சவுதியை விமர்சித்தன.

விசாரணை

இந்நிலையில், சவுதி அரேபிய அரசு வெளியிட்ட அறிக்கை: துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் ஏற்பட்ட அடிதடி தகராறில் கொலை செய்யப்பட்டார். அரசின் ஆரம்பகட்ட விசாரணையில், ஜமால், தூதரகத்தில் உள்ள சிலருடன் பேசி கொண்டிருந்தார். தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடி தகராறாக மாறயது. இந்த சம்பவம் தொடர்பாக 5 உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை