சபரிமலையில் அடுத்தடுத்து பரபரப்பு ஐயப்பனை தரிசிக்க அடம் பிடித்த தலித் மகளிர் கூட்டமைப்பு தலைவி

தினகரன்  தினகரன்
சபரிமலையில் அடுத்தடுத்து பரபரப்பு ஐயப்பனை தரிசிக்க அடம் பிடித்த தலித் மகளிர் கூட்டமைப்பு தலைவி

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்றும் ஒரு இளம்பெண் தரிசனத்திற்காக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து சபரிமலைக்கு செல்லும் பெண்கள் ஆங்காங்கே போராட்டக்காரர்களால் தடுத்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். இந்த பரபரப்பிற்கு இடையே நேற்று பிற்பகல் 2 மணியளவில் பம்பை போலீஸ் நிலையத்திற்கு 2 இளம்ெபண்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் கொல்லம் மாவட்டம் சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சு (38). இவர் கேரள தலித் மகளிர் கூட்டமைப்பு தலைவர் ஆவார். இருவரும் தரிசனத்திற்கு வந்திருப்பதாகவும், தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வேண்டுமென்றும் போலீசாரிடம் கூறினர். அவர்கள், முந்தைய தினங்களில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து அவர்களிடம் விளக்கினர்.இதையடுத்து மஞ்சுவுடன் வந்தவர் திரும்பி சென்று விட்டார். ஆனால் மஞ்சு, தரிசனத்திற்கு சென்றே தீருவேன் என்று பிடிவாதமாக கூறினார். இதனால் மஞ்சுவை அழைத்து செல்வது பறறி போலீசார் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆனால், தொடர் பிரச்னை, விசாரணை ஆகியவற்றை தொடர்ந்து அவரும் மாலையில் திரும்பிச் சென்றார். ரஹ்னா மீது வழக்கு: சபரிமலைக்கு செல்ல முயன்ற ரஹ்னா பாத்திமா, பேஸ்புக்கில் மத உணர்வை தூண்டியதாக ராதாகிருஷ்ண என்பவர் பத்தனம்திட்டா போலீஸ் எஸ்பி நாராயணனிடம் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து ரஹ்னா பாத்திமா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.திருச்சி பெண் தடுத்து நிறுத்தம்சபரிமலைக்கு நேற்று மதியம் 12 மணியளவில் திருச்சியை சேர்ந்த லதா என்ற பெண், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருமுடி கட்டுகட்டி சன்னிதானம் வந்தார். அவருக்கு 50 வயதுக்கு குறைவாக இருக்கும்் என்று நினைத்து பக்தர்கள் தடுத்தனர். ஆனால், அவர் ஆதார் கார்டை காட்டிய பின்னர் அனுமதித்தனர்.

மூலக்கதை