தங்கம் சவரனுக்கு ரூ40 குறைந்தது

தினகரன்  தினகரன்
தங்கம் சவரனுக்கு ரூ40 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ40 குறைந்துள்ளது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் கடந்த 15ம் தேதி ஒரு சவரன் ரூ.24,464 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை வரலாற்றில் இந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததில்லை என்ற சாதனையையும் அன்றைய தினம் பெற்றது. அதைத் தொடர்ந்து தங்கம் விலை 16ம் தேதி சவரன் ரூ24,344, 17ம் தேதி ரூ24,272, 18ம் தேதி ரூ24,264, 19ம் தேதி ரூ24,336 என்றும் தங்கம் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ5 குறைந்து, ஒரு கிராம் ரூ3,037க்கும், சவரன் ரூ40 குறைந்து ஒரு சவரன் ரூ24,296க்கும் விற்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை