5 வகை இனிப்பு ஆவின் தீபாவளி ஸ்பெஷல்

தினகரன்  தினகரன்
5 வகை இனிப்பு ஆவின் தீபாவளி ஸ்பெஷல்

சென்னை: ஆவின் நிறுவனம் நுகர்வோரின் தேவையைக் கருத்தில் கொண்டு, நுகர்வோர் தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக பல வகையான சிறப்பு இனிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது 250 கிராம் எடைக் கொண்ட மில்க் கேக் ரூ160, நெய் பாதுஷா ரூ160, நட்ஸ் அல்வா ரூ180, பாதாம் அல்வா ரூ230, முந்திரி கேக் ரூ230 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆவின் இனிப்புகளும் 50 ஆவின் பாலகம் மற்றும் 500க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆவின் சிறு சில்லரை விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். மேலும் மொத்தமாக ஆவின் இனிப்புகள் தேவைப்படுபவர்கள் ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நந்தனம் ஆவின் அலுவலகம் ஆகியவற்றில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மூலக்கதை