பெட்ரோல், டீசல் விலை பைசா கணக்கில் குறைப்பு

தினகரன்  தினகரன்
பெட்ரோல், டீசல் விலை பைசா கணக்கில் குறைப்பு

புதுடெல்லி: சர்வதேச அளவில் கச்ச எண்ணெய் விலை குறைந்ததைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலையில் சிறிது அளவு எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இதையடுத்து, டெல்லியில் பெட்ரோல் விலையில் 36 பைசா குறைத்து லிட்டர் ரூ.81.99 ஆகவும், டீசல் விலையில் 12 பைசா குறைத்து லிட்டர் ரூ.75.36 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் பைசா கணக்கில் சிறிய அளவில் குறைத்துள்ளன. வெள்ளிக்கிழமை விற்கப்பட்ட விலையில் இருந்து நேற்று பெட்ரோல் விலையில் 39 பைசாவும், டீசல் விலையில் 12 பைசாவும் குறைத்துள்ளன.மும்பையில் நேற்று பெட்ரோல் விலையில் 38 பைசா குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் 87.46 ஆக விற்கப்பட்டது. அதேபோல், டீசல் விலையில் 13 பைசா குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் 79 ஆக விற்கப்பட்டது. விலை அதிகரித்தத்தைத் தொடர்ந்து, கடந்த 5ம் தேதிக்கு பின்னர் கலால் வரி, மானிய உதவி குறத்தபோதிலும் டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாத நிலையை எட்டியது. லிட்டருக்கு ரூ.2.74 அதிகரித்தது. இந்த கால கட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.33 அதிகரித்தது.

மூலக்கதை