இந்தியாவின் முதல் மெய்நிகர் கரன்சி ஏ.டி.எம்.,

தினமலர்  தினமலர்
இந்தியாவின் முதல் மெய்நிகர் கரன்சி ஏ.டி.எம்.,

பெங்களூரு: இந்­தி­யா­வில், முதன் முறை­யாக, வலை­த­ளங்­களில் புழங்­கும் பிட்­காய்ன் போன்ற மெய்நி­கர் கரன்­சி­களை வழங்­கும், ஏ.டி.எம்., திறக்­கப்பட்­டுள்­ளது.ரிசர்வ் வங்கி, மெய்­நி­கர் கரன்சி பரி­வர்த்­த­னைக்கு தடை விதித்­துள்­ளது. எவ்­வி­த­மான கட்­டுப்­பாட்டு அமைப்­பின் கீழும் வராத, இந்த மெய்­நி­கர் கரன்­சி­கள்,முத­லீட்­டிற்கு பாது­காப்­பா­னவை அல்ல என்­பது தான் அதற்கு கார­ணம்.எனி­னும், ரிசர்வ் வங்கி உத்­த­ரவை மீறி, யுனோ­காய்ன் எனும், மெய்­நி­கர் கரன்சி சந்தை, முதன் முத­லாக பெங்­க­ளூ­ரில், பிரத்­ே­யக ஏ.டி.எம்.,யை திறந்­துள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி சாத்­விக் விஸ்­வ­நாத் கூறி­ய­தா­வது:யுனோ­காய்ன் சந்­தை­யில் பதிவு செய்து, மெய்­நி­கர் கரன்சி வர்த்­த­கத்­தில் ஈடு­ப­டு­வோ­ரின் வச­திக்­காக, ஏ.டி.எம், திறக்­கப்பட்­டுள்­ளது.இந்த, ஏ.டி.எம்.,மில், குறைந்­த­பட்­சம், 1,000 ரூபாய் டிபா­சிட் செய்­ய­லாம்; திரும்ப எடுக்­க­லாம். டிபா­சிட் செய்­தோர், மொபைல்­போன் மூலம், யுனோ­காய்ன் வலை­த­ளத்­தில், பிட்­காய்ன் உள்­ளிட்ட மெய்நி­கர் கரன்­சி­களை வாங்­க­லாம்.வாங்­கிய கரன்­சி­களை விற்று, பண­மாக்க விரும்­பி­னால், அது குறித்து, வலை­த­ளத்­தில் விண்­ணப்­பிக்­க­லாம்.அவர்­க­ளுக்கு, 12 இலக்க எண் மற்­றும் ஒரு­முறை கட­வுச் சொல் வழங்­கப்­படும். அதை, ஏ.டி.எம்.,மில் உள்­ளீடுசெய்து, ரொக்­கப் பணத்தை பெற்­றுக் கொள்­ள­லாம்.எனி­னும், ஒரு நாளில் நடை­பெ­றும் ரொக்­கப் பரி­வர்த்­த­னை­க­ளுக்கு கட்­டுப்­பாடு உள்­ளது.இது­போன்ற இயந்­தி­ரங்­களை, விரை­வில், டில்லி, மும்­பை­யி­லும் நிறுவ திட்­ட­மிட்­டுள்­ளோம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
சட்­டப் பிரச்­னையா? : மெய்­நி­கர் கரன்சி வர்த்­த­கத்­தில் ஈடு­ப­டு­வோ­ருக்கு, வங்­கி­கள் மற்­றும் நிதி நிறு­வ­னங்­கள் எவ்­வித சேவை­யும் வழங்­கக் கூடாது என, ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்­டுள்­ளது. யுனோ­காய்ன், வங்­கிச் சேவையை பயன்­ப­டுத்­தா­மல், மெய்­நி­கர் கரன்சி பரி­வர்த்­த­னைக்கு, ஏ.டி.எம்.,யை நிறு­வி­யுள்­ளது. அத­னால், இதில் சட்­டப் பிரச்னை ஏதும் வராது என, நினைக்­கி­றேன். பொறுத்­தி­ருந்து பார்க்­க­லாம்.
காசிப் ராஜா நிறுவனர், கிரிப்டோ காணுான்

மூலக்கதை