பதவியிலிருந்து விலகுவேன் : மோகன்லால் விரக்தி

தினமலர்  தினமலர்
பதவியிலிருந்து விலகுவேன் : மோகன்லால் விரக்தி

கடந்தவருடம் கேரளாவில் நடந்த மலையாள நடிகை கடத்தல் சம்பவத்தில் குற்றவாளி ஆக்கப்பட்டது நடிகர் திலீப் தான் என்றாலும், இப்போது பெண்ணியத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் நடிகைகள் மோகன்லாலின் தலையையே அதிகம் உருட்டுகிறார்கள். ஆம்.. நடிகர்சங்க தலைவராக மோகன்லால் பொறுப்பேற்றதும் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தார் என்பதற்காகத்தான்.

பெண்கள் நல அமைப்பின் பலவித போராட்டங்களுக்கு பிறகு, தற்போது திலீப்பை சங்கத்திலிருந்து ராஜினமா செய்ய வைத்த மோகன்லால் இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, “எல்லா விஷயங்களிலும் என் பெயரை முன்னிறுத்தி இந்த விஷயம் பேசப்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் கூட என் பெயரை முன்னிறுத்திதான் இந்த செய்தியை ஒளிபரப்புகிறார்கள்.

இதை நான் துளியும் விரும்பவில்லை. நடிகர் சங்க தலைவராக நான் இப்போது திருப்தியாக இல்லை. நான் எதற்கு அப்படி என் பெயரையும் கெடுத்துக்கொண்டு சங்க தலைவராக இருக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால், தலைவர் பதவியை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை” என தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மூலக்கதை