சபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள் : இயக்குநர் கவுரவ்

தினமலர்  தினமலர்
சபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள் : இயக்குநர் கவுரவ்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்ததிலிருந்து பல பிரச்னைகள் உருவாகி வருகின்றன. தற்போது சபரிமலையில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் 99 சதவீத பெண்கள் செல்ல மறுக்கின்றன வேளையில் பெண்ணியவாதிகள் என்று கூறும் சில பெண்கள் நுழைய முயற்சித்து வருகின்றனர். இதனால் சபரிமலை, கலவர பூமியாக மாறியிருக்கிறது.

இதுப்பற்றி தூங்காநகரம், சிகரம் தொடு, இப்படை வெல்லும் படங்களின் இயக்குநர் கவுரவ் நாராயணன், தனது ஆதங்கத்தை வீடியோ வாயிலாக தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது : சபரிமலை விவகாரம் மனதிற்கு வேதனை அளிக்கிறது. புனித ஸ்தலம், ஐதீகமான ஸ்தலம், சாமி கும்பிட நிம்மதியாக சென்று வரக்கூடிய ஸ்தலத்தில் போலீஸ் தடியடி, கல்வீச்சு நடப்பதாக நன்றாகவாக இருக்கிறது

எந்த ஒரு மதமாக இருந்தாலும் அடுத்தவர்களின் மனதை கஷ்டப்படுத்தாமல் இருந்தால் தான் கடவுள் அவர்களை ஆசீர்வதிப்பார், கஷ்டப்படுத்தினால் ஏற்க மாட்டார். லட்சக்கணக்கானவர்களின் மனதை உடைத்து கோவிலில் நுழைந்து சாமி கும்பிடுவதால் அந்த சகோதரிகளுக்கு என்ன கிடைக்க போகிறது. சத்தியமாக தெரியவில்லை.

இப்போது சென்ற மூன்று பெண்களும் அவர்கள் சார்ந்த மதங்களின் இறைவழிபாட்டு தலங்களுக்குள் உள்ளே செல்ல முடியுமா. கோவில் என்பது சில சட்டத்திட்டங்கள் கடைபிடித்து வரப்படுகிறது. அதை சட்டத்தின் வாயிலாக, கோர்ட் வாயிலாக உடைப்போம் என்று சொல்வது நியாயம் கிடையாது.

சத்தியமாக இதற்கு பின்னாடி அரசியல் சக்தி உள்ளது. அவர்கள் சொல்ல நீங்கள் செய்கிறீர்கள். தயவு செய்து சபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள்.

இவ்வாறு கூறியுள்ளார்.

#Sabarimalai kindly respect the sanctity and the belief of so many people.

மூலக்கதை