"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தனது பிறந்தநாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

'பேட்ட' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முன்கூட்டியே நிறைவு செய்து விட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது:

 டிசம்பர் 12ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு இல்லை. கட்சி தொடங்குவதற்கான பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்து விட்டன.கட்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேரம் வரும்போது அதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும். 

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். அதே சமயம் ஐதீகத்தையும் பின்பற்ற வேண்டும்.  

மீடூ என்பது பெண்களுக்கு பாதுகாப்பு தரும் சாதகமான இயக்கம். அதேசமயம் பெண்கள் அதனை தவறான வழியில் பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு  நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.. 

மூலக்கதை