புதிய பொருளாதார ஆலோசகர் ஓரிரு மாதங்களில் நியமிக்கப்படுவார்

தினமலர்  தினமலர்
புதிய பொருளாதார ஆலோசகர் ஓரிரு மாதங்களில் நியமிக்கப்படுவார்

புதுடில்லி: மத்­திய அர­சின் புதிய தலைமை பொரு­ளா­தார ஆலோ­ச­கர், அடுத்த ஓரிரு மாதங்­களில் நிய­மிக்­கப்­ப­டு­வார் என, தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. மத்­திய அர­சின் தலைமை பொரு­ளா­தார ஆலோ­ச­க­ராக இருந்த, அரவிந்த் சுப்­ர­ம­ணி­யன், ஜூன் மாதம், தன்­னு­டைய பத­வியை சொந்த கார­ணங்­க­ளுக்­காக, ராஜி­னாமா செய்­தார். அவ­ரது ராஜி­னா­மாவை, நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்­லி­யும் ஏற்­றுக் கொண்­டார்.
கடந்த, 2014ல்,தலைமை பொரு­ளா­தார ஆலோ­ச­க­ராக இருந்த ரகு­ராம் ராஜன், ரிசர்வ் வங்­கி­யின் கவர்­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டதை அடுத்து, அப்­ப­த­விக்கு நிய­மிக்­கப்­பட்­டார், அர்­விந்த் சுப்­ர­ம­ணி­யன்.அவ­ரு­டைய மூன்று ஆண்டு பத­விக்­கா­லம் முடி­வ­டைந்­த­தும், மேலும் ஓராண்­டுக்கு பதவி நீட்­டிப்பு வழங்­கப்­பட்­டது. ஆனால், பத­விக்­கா­லம் முடி­யும் முன்பே, ஜூன் மாதம் பத­வியை ராஜி­னாமா செய்­து­விட்­டார் அவர்.இதை­ய­டுத்து, இப்­ப­த­விக்கு பொருத்­த­மான நபரை தேர்ந்­தெ­டுக்க, ரிசர்வ் வங்­கி­யின் முன்­னாள் கவர்­ன­ரான, பிமல் ஜலான் தலை­மை­யில், ஒரு குழு அமைக்­கப்­பட்­டது.இக்­கு­ழு­வா­னது, தகு­தி­யான நபர்­களை தேர்ந்­தெ­டுத்து கொடுத்து, அதன்­பின், ஓரிரு மாதங்­களில் புதிய ஆலோ­ச­கர் நிய­மிக்­கப்­ப­டு­வார் என, தெரி­கிறது.

மூலக்கதை