விரைவில் விரிவான தங்க கொள்கை மத்திய அரசு தாக்கல் செய்கிறது

தினமலர்  தினமலர்
விரைவில் விரிவான தங்க கொள்கை மத்திய அரசு தாக்கல் செய்கிறது

புதுடில்லி: ‘நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் துறையை ஊக்­கு­விக்­கும் நோக்­கில், விரி­வான தங்க கொள்­கையை, விரை­வில், மத்­திய அரசு தாக்­கல் செய்­யும்’ என, தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன. பிர­த­மர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசு, நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் துறையை மேம்­ப­டுத்த, பல அதி­ரடி நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது.இதன் ஒரு பகு­தி­யாக, உலோ­கத் தொழில் துறை, நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் துறையை ஊக்­கு­விக்­கும் நோக்­கில், விரி­வான தங்க கொள்­கையை, விரை­வில் தாக்­கல் செய்ய, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ள­தாக தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன.இதன் மூலம், உள்­நாட்டு நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் துறை­யின் ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க, மத்­திய அரசு முடிவு செய்­து உள்­ளது.பிப்­ர­வரி மாதத்­தில், மத்­திய நிதி அமைச்­சர் அருண் ஜெட்லி, ‘புதிய விரி­வான தங்க கொள்கை அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்’ என, கூறி­யி­ருந்­தார்.மத்­திய அர­சுக்கு ஆலோ­சனை வழங்­கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, ‘தங்­கம் மீதான இறக்­கு­மதி வரியை, 10 சத­வீ­தத்­தில் இருந்து குறைக்க வேண்­டும்’ என­வும், ‘அதன் மீதான, 3 சத­வீத, ஜி.எஸ்.டி.,யையும் குறைக்க வேண்­டும்’ என­வும், அர­சுக்கு பரிந்­துரை செய்­தது.மேலும், தங்க கடன் பத்­தி­ரங்­கள் உள்­ளிட்­ட­வற்றை ஊக்­கப்­ப­டுத்­த­வும், ‘நிடி ஆயோக்’ பரிந்­துரை செய்­தது.நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­க­ளின் ஏற்­று­ம­தியை ஊக்­கு­விக்க, சிறப்பு திட்­டத்­தின் கீழ், ஊக்­கத் ­தொ­கை­களை வழங்­கும்­படி, நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் ஏற்­று­மதி ஊக்­கு­விப்பு கவுன்­சில், மத்­திய அர­சுக்கு கோரிக்கை விடுத்­துள்­ளது.

மூலக்கதை