நிதி சிக்கலில் உள்ளதா ஓ.என்.ஜி.சி., நிறுவனம்?

தினமலர்  தினமலர்
நிதி சிக்கலில் உள்ளதா ஓ.என்.ஜி.சி., நிறுவனம்?

புது­டில்லி: ‘பொதுத் துறை நிறு­வ­ன­மான, ஓ.என்.ஜி.சி., அதன் நிதி நிலைமை குறித்து வரும் செய்­தி­கள் தவ­றா­னவை’ என, தெரி­வித்­துள்­ளது.சமீ­பத்­தில், ஓ.என்.ஜி.சி., நிறு­வ­னம், அதன் ஊழி­யர்­க­ளுக்கு சம்­ப­ளம் வழங்­கு­வ­தற்கு, போதிய நிதி கைவ­சம் இல்­லாத கார­ணத்­தால், வங்கி ஓவர் டிராப்ட் வச­தியை பயன்­ப­டுத்தி இருப்­ப­தாக செய்­தி­கள் வெளி­யா­கின.இச்­செய்­தியை, ஓ.என்.ஜி.சி., நிறு­வ­னத்­தின் நிதி பிரிவு இயக்­கு­னர், சுபாஷ் குமார் மறுத்­துள்­ளார்.
இது குறித்து, அவர் கூறி­ய­தா­வது:நிறு­வ­னத்­தின் சில பகு­தி­களில், ஊழி­யர்­க­ளுக்கு சம்­ப­ளம் வழங்க, ஓவர் டிராப்ட் வாங்­கி­ய­தாக வரும் செய்­தி­கள் உண்­மைக்கு மாறா­னவை. நிறு­வ­னம் மிக­வும் வலு­வான நிதி நிலை­யில் உள்­ளது.நடப்பு நிதி­யாண்­டில், பட்­ஜெட் போடப்­பட்ட, 32 ஆயி­ரத்து, 77 கோடி ரூபாய் செல­வு­களை சமா­ளிக்­கும் அள­வுக்கு, நிதி நிலை உள்­ளது. கச்சா எண்­ணெய் விலை குறை­வாக இருந்த கால கட்­டத்­தி­லேயே, அனைத்து தேவை­க­ளை­யும் நிறை­வேற்­றி­னோம். இப்­போது எண்­ணெய் விலை அதி­க­ரித்­துள்ள நிலை­யில், ஏன் சிர­மப்­பட போகி­றோம்?நிறு­வ­னத்­தின் ஆண்டு வரு­வாய், 85 ஆயி­ரம் கோடி ரூபாய். நிறு­வ­னத்­தின் மூல­தன தேவை­க­ளோ­டும், செயல்­பாட்டு தேவை­க­ளோ­டும் ஒப்­பி­டும்­போது, சம்­ப­ளம் என்­பது சொற்­பத் தொகையே.இந்­நி­று­வ­னம், அர­சி­யல்­க­ளுக்கு அப்­பாற்­பட்ட நிறு­வ­ன­மா­கும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.அர­சின் கைவ­சம் இருக்­கும், எச்.பி.சி.எல்., நிறு­வ­னத்­தின் பங்­கு­களை, ஜன­வரி மாதத்­தில், 36 ஆயி­ரத்து, 915 கோடி ரூபாய்க்கு, ஓ.என்.ஜி.சி., வாங்­கி­யது. மேலும், இதற்­காக, குறு­கிய கால கட­னாக, 24 ஆயி­ரத்து, 881 கோடி ரூபாயை வாங்கி இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை