'தொடரி' நஷ்டத்தை ஈடு செய்யும் தனுஷ்

தினமலர்  தினமலர்
தொடரி நஷ்டத்தை ஈடு செய்யும் தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்துள்ள 'வடசென்னை' படம் பல்வேறு விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள 'மாரி 2' படம் வெளியாக உள்ளது.

தனுஷ் தற்போது ஒரு படத்தையும் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் அடுத்தடுத்து பல புதிய படங்களில் நடிக்க உள்ளார். 'ராட்சசன்' படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு 'கொடி' படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

இந்தப் படத்தை தற்போது 'விஸ்வாசம்' படத்தைத் தயாரித்து வரும் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இந்நிறுவனம் தயாரித்த 'தொடரி' படத்தில் தனுஷ் நடித்தார். அப்படம் பெரிய தோல்வி அடைந்தது. அதற்கு ஈடுகட்டும் வகையில் தனுஷ் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்கிறார்கள். இவற்றோடு 'விஐபி 3' படத்தை எடுக்கவும் தனுஷ் முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

மூலக்கதை