ஒரே டேக்கில் நடித்த விஜய்

தினமலர்  தினமலர்
ஒரே டேக்கில் நடித்த விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள். இந்த நிலையில், சர்கார் படம் குறித்த சில அதிரடி தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சர்கார் படத்தின் கிளைமாக்ஸில் ஒரு காட்சியில் 3 நிமிடங்கள் ஒரே டேக்கில் நடித்துள்ளார் விஜய். அந்தக்காட்சி ஹைலைட்டாக இருக்கும். ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறும் என்று தெரிவித்துள்ளார் முருகதாஸ்.

மூலக்கதை