சாவித்ரி மாதிரியான வேடத்தில் நடிக்க விரும்பாத கீர்த்தி சுரேஷ்

தினமலர்  தினமலர்
சாவித்ரி மாதிரியான வேடத்தில் நடிக்க விரும்பாத கீர்த்தி சுரேஷ்

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடியில் சாவித்ரி வேடத்தில் சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார் கீர்த்தி சுரேஷ். அதையடுத்து தெலுங்கில் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் தயாராகி வரும் கதாநாயகுடு படத்திலும் அவர் சாவித்ரி வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் நடிக்கவில்லை.

கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில், சாவித்ரி மாதிரியான வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் தான் மறுத்துவிட்டேன். இனி இதுபோன்ற வேடங்களில் நடிக்க மாட்டேன். அது ஒரு மேஜிக், இனி அது மாதிரி ஒரு வேடம் கிடைக்காது. ஒரு பிரபலத்தின் படமாக இல்லாமல் வேறு மாதிரியான கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

மூலக்கதை