செயற்கை நிலா: சீனா திட்டம்

தினமலர்  தினமலர்
செயற்கை நிலா: சீனா திட்டம்

பெய்ஜிங்: மின்சிக்கனம் மற்றும் தெரு விளக்குகளுக்கு மாற்றாக 2020ம் ஆண்டிற்குள் செய்ற்கை நிலா திட்டத்தை செயல்படுத்த சீனா திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஒளிரும் செயற்கை கோளை தயாரிப்பதில் தீவிரமாக உள்ளது.

இந்த திட்டத்திற்காக சிச்சுவான் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள செங்டு நகரில், மின்னும் செயற்கை கோளை தயாரித்து வருகின்றனர். நிலா போல் ஒளிரும் இந்த செயற்கைகோள், நிலாவை விட 8 மடங்கு அதிகம் மிளிரும். 50 சதுர கிலோ மீட்டர் தூரம் வெளிச்சம் கிடைக்கும். இந்த செயற்கை கோள், 2020 ம் ஆண்டில், சிச்சுவானில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. இது வெற்றி பெறும் பட்சத்தில் 2022ற்கும் மேலும் 3 செயற்கைகோள்களை ஏவவும் திட்டமிட்டு உள்ளது. வணிக ரீதியிலும், இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து உள்ளது. இத்திட்டத்தினால் ஏராளமான மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம் என சீனா நினைக்கிறது.

மூலக்கதை