நேனு ஷைலஜா இயக்குனரின் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்

தினமலர்  தினமலர்
நேனு ஷைலஜா இயக்குனரின் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்

இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசியின் மகள் கல்யாணி.. சில மாதங்களுக்கு முன் தெலுங்கில் வெளியான 'ஹலோ' படத்தில் அறிமுகமான கல்யாணியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து பிரியதர்ஷன் மலையாளத்தில் இயக்கும் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற வரலாற்றுப்படத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இந்தநிலையில் அடுத்ததாக தெலுங்கில் நடிகர் சாய் தரம் தேஜுடன் இணைந்து 'சித்ரலஹரி' என்கிற படத்தில் நடிக்கிறார் கல்யாணி.. இந்தப்படத்தின் துவக்கவிழா நேற்று பூஜை நடைபெற்றது. நேனு சைலஜா என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய கிஷோர் திருமலா தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.

மூலக்கதை