யாத்ரா'-வுக்காக தசரா ஸ்பெஷல் போஸ்டர்

தினமலர்  தினமலர்
யாத்ராவுக்காக தசரா ஸ்பெஷல் போஸ்டர்

மம்முட்டி தற்போது தெலுங்கில் 'யாத்ரா' என்கிற படத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் கேரக்டரில் நடிக்கிறார். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறாக அல்லாமல், 2௦௦3-ல் ஆந்திராவையே அதிரவைக்கும் விதமாக அவர் நடத்திய பாதயாத்திரையை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கும் இப்படத்தை மஹி ராகவ் என்கிற தெலுங்கு இயக்குனர் இயக்கியுள்ளார். தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தப்படத்திற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் படம் டிச-21ஆம் தேதி வெளியாகும் என ரிலீஸ் தேதியையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

மூலக்கதை