தொடர் மழை எதிரொலி; முட்டை விலை உயர்வு

தினமலர்  தினமலர்
தொடர் மழை எதிரொலி; முட்டை விலை உயர்வு

நாமக்­கல் : புரட்­டாசி மாதம் முடிவு, தொடர் மழை­யால், நுகர்வு அதி­க­ரித்து, முட்டை கொள்­மு­தல் விலை உயர்ந்­துள்­ளது.

நாமக்­கல், தேசிய முட்டை ஒருங்­கி­ணைப்­புக் குழு, கொள்­மு­தல் விலையை நிர்­ண­யம் செய்­கிறது. தமி­ழ­கத்­தில், புரட்­டாசி மாத விர­தத்­தால், நுகர்வு மற்­றும் விலை­யும் சரிந்­தது. கடந்த, 15ல், 370 காசு­க­ளாக நிர்­ண­யம் செய்­யப்­பட்­டது. நேற்று, 15 காசு உயர்த்­தப்­பட்டு, 385 காசு­க­ளாக நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

இது குறித்து, தமிழ்­நாடு முட்­டைக்­கோழி பண்­ணை­யா­ளர்­கள் சம்­மே­ளன துணைத் தலை­வர், வாங்­கிலி சுப்­ர­ம­ணி­யம் கூறி­ய­தா­வது: புரட்­டாசி விர­தம் முடிந்த நிலை­யில், நுகர்வு அதி­க­ரித்­துள்­ளது. மேலும், ஐத­ரா­பாத் மண்­ட­லத்­தைக் காட்­டி­லும், நாமக்­கல் மண்­ட­லத்­தில், கொள்­மு­தல் விலை குறை­வால், பீஹார், மும்பை, கோல்­கட்டா மாநி­லங்­க­ளுக்கு, தின­மும், 30 லட்­சம் முட்­டை­கள் அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றன. தற்­போது, தமி­ழ­கத்­தில் தொடர் மழை­யால், முட்டை விற்­பனை அதி­க­ரித்­துள்­ளது. இதை கருத்­தில் கொண்டே, கொள்­மு­தல் விலை உயர்த்­தப்­பட்­டது. இவ்­வாறு, அவர் கூறி­னார்.

மூலக்கதை