தவறாக திசை திருப்பும் விளம்பரங்களுக்கு தடை

தினமலர்  தினமலர்
தவறாக திசை திருப்பும் விளம்பரங்களுக்கு தடை

மும்பை : மக்­களை தவ­றாக திசை திருப்­பும் வகை­யில் பல நிறு­வ­னங்­கள் வெளி­யிட்ட, 89 விளம்­ப­ரங்­களை திரும்­பப் பெற உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. இத்­த­கைய விளம்­ப­ரங்­கள் குறித்து, ஜூன் மாதம், விளம்­பர கண்­கா­ணிப்பு அமைப்­பான, ஏ.எஸ்.சி.ஐ.,க்கு, 208 புகார்­கள் வந்­தன.அவற்­றில், ‘பெப்­சிகோ இந்­தியா, இந்­துஸ்­தான் யூனி­லி­வர், ஸ்பைஸ்­ஜெட்’ உள்­ளிட்ட நிறு­வ­னங்­க­ளின், 179 விளம்­ப­ரங்­கள் இடம் பெற்­றி­ருந்­தன.

புகார் தெரி­வித்­த­தும், 63 விளம்­ப­ரங்­க­ளின் தவ­று­களை நிறு­வ­னங்­கள் திருத்­திக் கொண்­டன. ஏ.எஸ்.சி.ஐ.,யின் நுகர்­வோர் புகார் கவுன்­சில், 89 விளம்­ப­ரங்­களை திரும்­பப் பெற உத்­த­ர­விட்­டுள்­ளது.இதில், இரு மடங்கு புர­தச் சத்து உள்­ள­தாக கூறும், பெப்­சி­கோ­வின், ‘குவாக்­கர் ஓட்ஸ்’ விளம்­ப­ர­மும் அடங்­கும்.மருத்­து­வர்­கள், எந்த பொரு­ளை­யும் விளம்­ப­ரப்­ப­டுத்­தக் கூடாது என்ற விதியை மீறி­ய­தால், இந்­துஸ்­தான் லீவ­ரின், ‘லைப்­பாய்’ சோப்பு விளம்­ப­ரத்தை திரும்­பப் பெற உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

ஒரு கப், ‘காம்ப்­ளான்’ பானத்­தில், ஒரு முட்­டைக்கு நிக­ரான புர­தச் சத்து உள்­ள­தா­க­வும், பிற பானங்­களில் அது­போல இல்லை என்ற விளம்­ப­ரத்­திற்­கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதர நிறு­வ­னங்­கள், அது­போல தெரி­விக்­காத நிலை­யில், ஒப்­பீ­டின்றி விளம்­ப­ரம் செய்­வது, நுகர்­வோரை திசை திருப்­பும் செயல் என, உத்­த­ர­வில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை