100 சதவீதம் கார் கடன்; ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகம்

தினமலர்  தினமலர்
100 சதவீதம் கார் கடன்; ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகம்

சென்னை : சேமிப்பு கணக்கு வைத்­தி­ருக்­கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, கார் வாங்­கு­வ­தற்­கான, 100 சத­வீ­தம் கடன் தொகையை, முன் அனு­ம­தி­யாக வழங்­கும் புதிய திட்­டத்தை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முதல் முறை­யாக அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.

இது குறித்து, வங்கி வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்பு: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, முன் அனு­மதி கார் கடன் வழங்­கும் வச­தியை, சேமிப்பு கணக்கு வைத்­தி­ருக்­கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­காக முதல் முறை­யாக அறி­மு­கம் செய்­துள்­ளது. இதன்­படி, சாலை­யில் காரை இயக்­கும் வரை ஆகக் கூடிய செல­வு­களை உள்­ள­டக்­கிய, 100 சத­வீத கார் கட­னுக்கு முன் அனு­மதி வழங்­கப்­ப­டு­கிறது.

கார் கடன், நான்கு மணி நேரத்­தில், 20 லட்­சம் ரூபாய் வரை வழங்­கப்­ப­டு­கிறது. விழா காலங்­களில், வாடிக்­கை­யா­ளர்­கள் கார் வாங்க உத­வி­யாக இந்த திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப் பட்­டுள்­ளது. கடனை திருப்­பிச் செலுத்­து­வ­தற்­கான அவ­கா­சம், ஏழு ஆண்­டு­கள் வரை வழங்­கப்­ப­டு­கிறது. இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை