500 கோடி ரூபாய்; நிதி திரட்டும் ஏர் இந்தியா

தினமலர்  தினமலர்
500 கோடி ரூபாய்; நிதி திரட்டும் ஏர் இந்தியா

புதுடில்லி : ஏர் இந்­தியா நிறு­வ­னம், 500 கோடி ரூபாய் நிதியை திரட்­டும் முயற்­சி­யில் இறங்கி உள்­ளது.

ஏர் இந்­தியா நிறு­வ­னம், 55 ஆயி­ரம் கோடி ரூபாய் கட­னில் சிக்­கித் தவிப்­ப­து­டன், தற்­போது செயல்­பாட்டு மூல­த­னம் மற்­றும் வட்டி கட்­டு­வ­தற்கே மிக­வும் சிர­மப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து, 500 கோடி ரூபாய் நிதி திரட்­டும் முயற்­சி­யில் இறங்கி உள்­ளது. இந்த, 500 கோடி ரூபாய் நிதியை, வங்­கி­க­ளி­ட­மி­ருந்து பெற உள்­ளது.

மத்­திய அரசு உத்­த­ர­வா­தத்­தின் அடிப்­ப­டை­யில், இந்த நிதியை திரட்­டு­கிறது, ஏர் இந்­தியா நிறு­வ­னம். அடுத்த வாரத்­துக்­குள்­ளாக இந்த நிதி திரட்­டும் பணி நிறைவு பெற்­று­வி­டும் என, உய­ர­தி­கா­ரி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

இது குறித்து, ஏர் இந்­தியா நிறு­வ­னத்­தின் உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: கட­னில் சிக்­கி­யுள்ள நிறு­வ­னம், தற்­போது திருப்­பிச் செலுத்த வேண்­டிய தொகைக்­கான வட்­டியை கட்­டு­வ­தற்கே மிக­வும் சிர­மப்­ப­டு­கிறது. எனவே, 500 கோடி ரூபாய் நிதியை வங்­கி­க­ளி­ட­மி­ருந்து பெற இருக்­கி­றோம். இதற்­கான உத்­த­ர­வா­தத்தை மத்­திய அரசு வழங்­கு­கிறது. இந்த கடன் ஓராண்­டுக்கு மட்­டும் தான். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை