எழுமின் படம் பார்க்க மாணவர்களுக்கு சலுகை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

எழுமின் திரைப்படம் பார்க்கும் மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்க தயாரிப்பாளர் அறிவித்து உள்ளார்.
எழுமின் படத்தில் விவேக், தேவயானி ஆகியோருடன் பிரவீன், ஸ்ரீஜித், வினீத், சுகேஷ், கீர்த்திகா, தீபிகா நடித்து உள்ளனர். 
படம் குறித்து விவேக் பேசும்போது, ‘ஒவ்வொரு படத்துக்கும்  வணிக லாபம் என்ற நோக்கம் இருக்கும். இதில் மாணவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை சொல்லி இருக்கிறோம். 
படம் பார்க்க தியேட்டருக்கு வரும் மாணவர்களுக்கு தயாரிப்பாளர் சலுகை அளிக்க வேண்டும்’ என்றார். 
தயாரிப்பாளர் வி.பி.விஜி பேசும்போது, ‘விவேக் வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறேன். முன்கூட்டியே நாங்கள் கொடுக்கும் டோக்கனை மாணவர்கள் தியேட்டர் கவுன்டரில் கொடுத்தால், அவர்களுக்கு ரூ.15 தள்ளுபடி செய்யப்படும்’ என்றார்.

மூலக்கதை