சபரிமலை நிலக்கல்லில் மீண்டும் பதற்றம்; இந்து அமைப்பினரின் பேரணியை கட்டுப்படுத்த போலீஸ் குவிப்பு

தினகரன்  தினகரன்
சபரிமலை நிலக்கல்லில் மீண்டும் பதற்றம்; இந்து அமைப்பினரின் பேரணியை கட்டுப்படுத்த போலீஸ் குவிப்பு

நிலக்கல்: நிலக்கல்லில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க கூடாது என்று இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்து அமைப்பினரோடு இணைந்து பாஜக இளைஞரணியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதும் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலக்கல், பம்பையில் நேற்று போராட்டம் வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டம் தீவிரமானதால் 4 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே நிலக்கல்லில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. இந்து அமைப்பினர் நடத்திய பேரணியை தடுத்து நிறுத்தி போலீசார் அவர்களை கைது செய்தனர்.பத்திரிக்கையாளர் தடுத்து நிறுத்தம்சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற பெண் பத்திரிக்கையாளர் தடுத்து நிறுத்தப்பட்டார். சுகாசினி ராஜ் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளராக பணியாற்றி வருகிறார். இவர் பம்பையில் இருந்து சென்றவரை அப்பாச்சிமேட்டில் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் சுகாசினி ராஜ் திரும்பினார்.ஆட்சியர் விசாரணை144 தடையை மீறி நிலக்கல்லில் பாஜக ஊர்வலம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. பாஜக ஊர்வலம் குறித்து நிலக்கல்லில் பத்தனம்திட்டா ஆட்சியர் நூகு விசாரணை நடத்திவருகிறார். பத்தனம்திட்டா எஸ்.பி. நாராயணன் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மூலக்கதை