துவங்கியது: வி.கே.டி., நான்கு வழிச்சாலையில் மூன்றாம் கட்டப்பணி...2020ல் செயல்பாட்டிற்கு கொண்டுவர நகாய் நடவடிக்கை

தினமலர்  தினமலர்
துவங்கியது: வி.கே.டி., நான்கு வழிச்சாலையில் மூன்றாம் கட்டப்பணி...2020ல் செயல்பாட்டிற்கு கொண்டுவர நகாய் நடவடிக்கை

வி.கே.டி., நான்கு வழிச்சாலையில் மூன்றாம் கட்டப்பணி...2020ல் செயல்பாட்டிற்கு கொண்டுவர நகாய் நடவடிக்கை -தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல நகாய் நிறுவனம் பயணம் எளிதாக அமைய நான்கு வழிச்சாலை அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறது . விக்கிரவாண்டியிலிருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலை இருவழிச்சாலையாக உள்ளதுதமிழகத்தின் நெற்களங்சியமாகவும், தமிழகத்தின் பெரிய கோவில் என்ற வரலாற்று பெயருடன் திகழும் தஞ்சாவூருக்கும், ஆன்மீக சுற்றுலா தலங்களை அதிகமாக கொண்ட கும்பகோணத்திற்கும் பொதுமக்கள் தங்கள் பயணத்தை எளிதாக சென்று வரவும் , வளர்ந்துவரும் வர்த்தக உலகில் பொருளாதராத்தை அதிகப்படுத்தும் நோக்கில் கனரக வாகனங்கள் எளிதாக செல்ல மத்திய அரசு ரூ.700 கோடி மதிப்பில் விக்கிரவாண்டியிலிருந்து சேத்தியாதோப்பு பின்னலுார் வரை 66 (65.96) கி.மீ., துாரத்திற்கு இரண்டாண்டுகளில் நான்கு வழிச் சாலை பணியை செய்து முடிக்க மும்பையை சேர்ந்த 'ரிலையன்ஸ் இன்பிரா ஸ்ட்ரெச்சர் லிட்' நிறுவனத்துடன் ஒப்பந்தம்செய்தது. முதற்கட்ட பணியாக சாலை அமையவுள்ள இடத்தில் உள்ள மரங்கள், வீடுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில், மொத்தமுள்ள 36 கோவில்களில், 16 கோவில்கள் மட்டும் அகற்றப்பட்டன.கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் ஆறுகள், சிறுநதிகள் , பாசன வாய்க்கால்களை கடக்க 25 சிறு பாலங்களும், 2 பாலங்கள்ஆற்றின் குறுக்கேயும், 3 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் பண்ருட்டி ரயில்வே மேம்பால பணி முடிவடைந்து விட்டது. கோலியனுார் மற்றும் வடலுாரில் ரயில்வே மேம்பாலப் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது.இரண்டாம் கட்ட பணியாக சாலையை அகலப்படுத்தும் பணி இரு புறமும் நடைபெற்று, ஆங்காங்கே சர்வீஸ் சாலைகள், சாலையின் நடுவில் மீடியன்கள் அமைக்க என மொத்தம் 180 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவு படுத்தப்பட்டது. சாலை அமைக்கும் போதே வளைவுகளில் விபத்து ஏற்படுவை தவிர்க்கும் விதமாக சிவில் இன்ஜினியர்கள் சர்வே செய்து வரையறை செய்யப்பட்டு விபத்தில்லாமல் பயணிக்க தேவையான சாலையை அமைத்தனர். கடந்த ஜூன் மாதம் மண்சாலை அமைத்து அந்தசாலை திடப்படுத்திடபணி சற்று கிடப்பில் போட்டாலும், ஆங்காங்கே இருந்த சிறு பாலம், பெரிய பாலங்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்நிலையில் இம்மாத துவக்கத்தில் பெய்த கனமழை சாலை திடப்படுத்திடும் தன்மைக்கு உதவியாக இருந்தது.தற்பொழுது மூன்றாம் கட்டபணியாக முன்னர் அமைத்த மண்சாலையின் மீது ஒன்றரை மீட்டர் உயரத்தை கூட்டும் வகையில் ,தற்பொழுது பார் மண் கொட்டி உயரப்படுத்தியும், சாலையை விரிவாக்கம் செய்யும் பணியினை ரிலையன்ஸ் நிறுவனத்தார்தொடங்கியுள்ளனர்.வரும் ஜனவரி 2019 முதல் தார் சாலை அமைக்கும் பணியை தொடர முடிவு செய்துள்ளனர்.விக்கிரவாண்டி -கும்பகோணம் - தஞ்சாவூர் நான்கு வழிச்சாலையை விரைந்து முடித்து 2020ம் ஆண்டில் செயல்பாட்டிற்கு கொண்டு வர நகாய் நிறுவனம் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது .

மூலக்கதை