டெல்லியில் 271 கோடியில் பிரதமர்கள் அருங்காட்சியகம்

தினகரன்  தினகரன்
டெல்லியில் 271 கோடியில் பிரதமர்கள் அருங்காட்சியகம்

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பிரதமர்கள் குறித்த புகைப்படங்கள், வாழ்க்கை வரலாற்று தகவல்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில்  பிரத்யேக அருங்காட்சியகம் அமைப்பதற்காக நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. டெல்லி தீன்மூர்த்தி வளாகத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் முன்னாள் பிரதமர் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைந்துள்ளது.   நேருவின் நினைவாக மட்டும் உள்ள இந்த நினைவிடத்தை நாட்டின் அனைத்து பிரதமர்களின் நினைவிடமாக மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு  செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் பிரதமர்களின் நினைவு அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கும் வகையில் நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.  ரூ.271 கோடியில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்துக்கு மத்திய கலாச்சார துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், “தற்போது  ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய 3 பிரதமர்களுக்கு  மட்டுமே நினைவிடம் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் இனி வரும் பிரதமர்களும் இடம்பெறுவர். பிரதமர்கள் பயன்படுத்திய பொருட்கள்  மற்றும் அவர்களது வாழ்க்கை செய்திகளும், தகவல்களும் இடம்பெறும்’’ என்றார்.

மூலக்கதை