அனுப்பிய தகவலை அழிக்கும் முறை வாட்ஸ்அப், பேஸ்புக் புது நடவடிக்கை

தினகரன்  தினகரன்
அனுப்பிய தகவலை அழிக்கும் முறை வாட்ஸ்அப், பேஸ்புக் புது நடவடிக்கை

புதுடெல்லி: மற்றவர்களுக்கு அனுப்பிய தகவலை அழிக்கும் வசதியில் வாட்ஸ் அப் மாற்றம் கொண்டு வருகிறது. வாட்ஸ் அப்பில் உள்ள  ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ மூலம் ஒருவருக்கு அனுப்பிய தகவலை அழிக்க முடியும். இந்த வசதி இந்தாண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்தபோது 7  நிமிடங்களுக்குள் அழிக்கவோ அல்லது திரும்பபெறவோ அனுமதிக்கப்பட்டது. பின்னர் இந்த கால வரம்பை வாட்ஸ்அப் 1 மணி நேரம் 8  நிமிடங்கள், 16 நொடிகளாக அதிகரித்தது. இந்த வசதியை இன்னும் மேம்படுத்த வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது. அதாவது தகவலை அழிக்கும் வேண்டுகோளை, தகவலை பெறும் நபர் 13 மணி நேரம் 8 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் பெறவில்லை என்றால்,  அந்த தகவல் அழிக்கப்படாது. அதாவது தகவல் பெறும் நபரின் போன் ஆப் செய்யப்பட்டிருந்தால், ஒருவர் அனுப்பிய தகவலை 13 மணி நேரம் 8  நிமிடங்கள் மற்றும் 16 நிமிடங்கள் கழித்து அழிக்க முடியாது. இந்த வசதி வாட்ஸ் அப்பில் விரைவில் மேம்படுத்தப்படவுள்ளது.  தில்லுமுல்லுகளை தடுப்பதற்காக இந்த வசதி கொண்டு வரப்படுவதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, அனுப்பிய மெசேஜை திரும்ப பெறும் முறையை பேஸ்புக்கும் அறிமுகப்படுத்த உள்ளது. இதுவரையில் இந்த வசதி இல்லாமல்  இருந்தது.

மூலக்கதை