மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு விமானத்திலிருந்து விழுந்து பணிப்பெண் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தினகரன்  தினகரன்
மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு விமானத்திலிருந்து விழுந்து பணிப்பெண் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மும்பை: ஏர் இந்தியா போயிங்-777 விமானம் ஒன்று நேற்று காலை மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு  புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் இருந்த பணிப்பெண்களில் ஒருவரான ஹர்ஷா லோபோ (53) விமான கதவை மூடிக்  கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டது. அவர் நானாவதி மருத்துவமனையில்  சேர்க்கப் பட்டுள்ளார்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஹர்ஷாவுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன்  மார்பு, அடிவயிறு,  கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை