ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று வீடுகளுக்கு மது சப்ளை செய்யும் திட்டம் ரத்து: ஒரே நாளில் மகாராஷ்டிரா அமைச்சர் பல்டி

தினகரன்  தினகரன்
ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று வீடுகளுக்கு மது சப்ளை செய்யும் திட்டம் ரத்து: ஒரே நாளில் மகாராஷ்டிரா அமைச்சர் பல்டி

நாக்பூர்: மகாராஷ்டிராவில் மது வகைகளை ஆன்லைனில் ஆர்டர் பெற்று வீடுகளுக்கே சென்று சப்ளை செய்யும் திட்டத்தை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே திரும்ப பெற்றுள்ளார். மகாராஷ்டிரா கலால் வரித்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே. இவர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘மகாராஷ்டிராவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்த ஆன்லைனில் ஆர்டர் பெற்று மதுவகைகளை வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இத்திட்டத்திற்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், இந்த அறிவிப்பு குறித்து முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் சந்திரசேகரை தொடர்புக் கொண்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதனால் அமைச்சர் சந்திரசேகர் தான் கூறிய திட்டத்தை ஒரே நாளில் திரும்ப பெற்றுக்கொண்டார். சந்திரசேகர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வீடுகளுக்கு நேரடியாக மது டெலிவரி செய்யப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெறுகிறேன்’’ என்று அறிவித்தார்.

மூலக்கதை