ஐநா சபையின் மனித உரிமை அவை உறுப்பினராக இந்தியா தேர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐநா சபையின் மனித உரிமை அவை உறுப்பினராக இந்தியா தேர்வு

ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவையின் உறுப்பினராக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா தேர்வாகியுள்ளது. ஐநா மனித உரிமை சபைக்கான புதிய நாடுகளை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு ஜெனிவாவில் நடந்தது.

மனித உரிமை அமைப்பில் உள்ள 193  நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வாக்களித்தனர். 97 வாக்குகளை பெற்றால் மனித உரிமை அவைக்கு உறுப்பினராக முடியும்.

இந்நிலையில், 188 வாக்குகளை இந்தியா பெற்றது. மற்ற நாடுகளை காட்டிலும் அதிக ஆதரவுடன் இந்தியா தேர்வானது.

அடுத்தாண்டு தொடக்கத்தில் இருந்து 3 ஆண்டுகளுக்கு அவையில் உறுப்பினராக இந்தியா இருக்கும்.  

இந்தியாவுடன் சேர்த்து பசிபிக் பிராந்தியத்திற்கென வங்கதேசம், பக்ரைன், பிலிப்பைன்ஸ், பிஜி ஆகிய நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவுக்கு வாக்களித்த நாடுகளுக்கு ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் நன்றி தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக செயல்படும் என அவர் தெரிவித்தார்.

.

மூலக்கதை