தாமிரபரணி புஷ்கரம் விழா துவங்கியது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தாமிரபரணி புஷ்கரம் விழா துவங்கியது!

நெல்லையில் தாமிரபரணி புஷ்கரம் விழாத் துவங்கியது.

வற்றாத ஜீவநதியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வளம் சேர்க்கும் தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மகாபுஷ்கர விழா  துவங்கி,  வரும் 23ம் தேதி வரை சிறப்பாக நடக்கிறது. 

இதற்காக தாமிரபரணி நதிக்கரையில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 143 படித்துறைகளில் நீராட நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்கள் பாதுகாப்போடு நீராடுவதற்கு வசதியாக ஆழமான ஆற்றுப்பகுதிகளில் மணல் மூட்டைகள் குவிக்கப்பட்டு உள்ளன. சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக  குவிக்கப்பட்டு உள்ளனர்.

தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு, வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர். கொல்கத்தாவில் இருந்து நெல்லை வந்த ஹவுரா எக்ஸ்பிரசில் வடமாநில பக்தர்கள் பலர் இறங்கி குறிப்பிட்ட தீர்த்தங்களுக்கு பயணமாகினர். பக்தர்கள் வருகை காரணமாக நெல்லையில் உள்ள அனைத்து லாட்ஜ்களும் நிரம்பி வழிகின்றன.

நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதற்கு வசதியாக தென்னக ரயில்வே 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்க உள்ளது. இந்த ரயில்கள் அனைத்தும் தாம்பரம் - நெல்லை இடையே இயக்கப்படுகின்றன.

நெல்லை, தூத்துக்குடி தீர்த்த கட்டங்களுக்கு பயணிகள் செல்ல வசதியாக ஆட்டோக்கள், வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கூடுதல் பஸ்கள் இயக்கப் படுகின்றன.

மூலக்கதை