கர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அமைச்சர் திடீர் ராஜினாமா

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அமைச்சர் திடீர் ராஜினாமா

 பெங்களூரு: கர்நாடக மாநில தொடக்கக்கல்வித்துறை அமைச்சர் என்.மகேஷ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றிபெற்ற ஒரே எம்.எல்.ஏ.மகேஷ் ஆவார். சொந்த காரணங்களுக்காக அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக மகேஷ் அறிவித்துள்ளார். அவர் இடைத்தேர்தலில் ம.ஜ.த.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியியுள்ளது.

மூலக்கதை