ரஃபேல் போர்விமான ஊழல் : பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்; ராகுல் காந்தி விழியுறுத்தல்

தினகரன்  தினகரன்
ரஃபேல் போர்விமான ஊழல் : பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்; ராகுல் காந்தி விழியுறுத்தல்

டெல்லி : ரஃபேல் போர்விமான ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி ஊழல்வாதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி ஊழல் செய்துள்ளதாக பிரான்ஸ் முன்னாள் அதிபரே குற்றம் சாட்டியுள்ளார். ரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஒப்பந்தம் செய்த விலையைவிட ரூ.41,205 கோடி அதிகமாக இப்போதைய அரசு கொடுத்துள்ளது. ஒரு விமானத்துக்கு சராசரியாக ரூ.1,100 கோடி அதிகம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், தொழிலதிபர் அனில் அம்பானிக்கும் இடையே கூட்டணி இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.இந்நிலையில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என்று பிரான்ஸ் சென்றது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ரஃபேல் போர்விமான பேர ஊழல் உண்மை விவரம் விரைவில் வெளிவரும் என்று அவர் கூறியுள்ளார்.மேலும் ரரேந்திர மோடியின் கண்ணுக்கு எதிரேதான் ஊழல் நடந்துள்ளது. ஆகவே இந்த விவகாரத்தில் கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்துவதே ஒரே தீர்வு என்று கூறியுள்ளார்.

மூலக்கதை