மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கா கேமலாடையின்றி வீடியோ வெளியிட்ட செரினா

தமிழ் முரசு  தமிழ் முரசு
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கா கேமலாடையின்றி வீடியோ வெளியிட்ட செரினா

வாஷிங்டன்: டென்னிஸ் வீராங்கனை செரினா, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த தனது மேலாடையின்றி பாட்டு பாடும் வீடியோ வெளியிட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், உலகமெங்கும் மார்பக புற்றுநோய் தாக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தனது மேலாடையின்றி ஆஸ்திரேலியன் ராக் கிளாசிக் முறையில் பாட்டு பாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ வைரலாகி வருகின்றது. ‘ஐ டச் மைசெல்ப்’ என தொடங்கும் இந்த பாடலின் வீடியோவை, செரினா தனது ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.



இந்த வீடியோ வெளியான ஒருசில மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு பாடல் பாடியதாகவும், வரும்முன் காப்பதே நல்லது என்றும் செரினா கூறியுள்ளார்.

மேலும், பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் விழிப்புணர்வு கருத்துகளை எடுத்து கூறியுள்ளார்.

.

மூலக்கதை