இந்தோனேஷியா பலி 832 ஆனது

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தோனேஷியா பலி 832 ஆனது

ஜகார்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், சுனாமியால் பலியானோர் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேஷியாவின் சுலாவேசி தீவின் மத்தியப் பகுதியில் நேற்று முன்தினம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.

இது, ரிக்டர் அளவுகோலில் 7. 5 புள்ளியாக பதிவானது. இந்த பூகம்பத்தால் பலு, டோங்காலா  நகரங்கள் அதிர்ந்தன.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பலு கடற்கரை பகுதியில் சுமார் 18 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து சுனாமி பேரலை தாக்கியது. சுனாமியால் கடற்கரையை ஒட்டிய வீடுகள், கட்டிடங்களில் கடல் நீர் புகுந்தது.

ஷாப்பிங் மால்கள், பெரிய கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன.

பல இடங்களில் சாலைகள் பெயர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் இருளில் தவிக்கின்றனர்.   தகவல் தொடர்பு முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீட்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணிக்கு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆயிரக்கணக்கானோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுனாமி, பூகம்பத்தால் பலியானோர் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது.

ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

.

மூலக்கதை