திகிலடைந்து போன ரஷ்ய புலனாய்வு பிரிவு போலீசார் 30 பேரை கொன்று நரமாமிசம் சாப்பிட்ட தம்பதியர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திகிலடைந்து போன ரஷ்ய புலனாய்வு பிரிவு போலீசார் 30 பேரை கொன்று நரமாமிசம் சாப்பிட்ட தம்பதியர்

மாஸ்கோ : ரஷ்யாவில், 30 பேரை கொன்று நரமாமிசம் சாப்பிட்ட தம்பதியரை கைது செய்த புலனாய்வு பிரிவு போலீசார், அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை கேட்டு திகிலடைந்துள்ளனர்.   உலகில், மனித இனம் மட்டுமே ஆறறிவு கொண்ட ஓர் இனமாக, ஏனைய ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளில் இருந்து வேறுபடுகின்றது. மனிதர்கள் தமது உணவுத் தேவைக்காக விலங்குகளை வேட்டையாடினார்கள்.    ஆனால் மனிதர்களே மனிதர்களை வேட்டையாடி உணவாக உட்கொள்வதை, ஆதிக் குடிகளை அல்லது காட்டு வாசிகளைக் குறிப்பிடுவார்கள்.

இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் நரமாமிசம் உண்ணும் மனிதர்கள் வாழ்கிறார்கள். இவர்களை ஆங்கிலத்தில் ‘கனிபல்’ (Cannibal) என்று அழைக்கின்றனர். இவர்கள், மனிதர்கள், விலங்குகளை வேட்டையாடுவது போன்று, தமது இனமல்லாத வேற்று இன அதாவது தம்மிலிருந்து வேறுபட்ட மனிதர்களை பொறி வைத்துப் பிடித்து,  உயிருடன் கடித்தும், மெதுமெதுவாக வெட்டியும், சமைத்தும் உணவாக உண்ணுவார்கள்.

இன்றும், அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினிய காடுகள், அமேசன் காடுகள், அந்தமான்  நிக்கோபர் தீவுகளின் சிறு தீவுக் கூட்டம், பப்புவாநியூகினியா, பிஜி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து போன்ற  நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கையில், கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யாவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



ரஷ்ய நாட்டின் வடகிழக்கில் உள்ள கிராஸ்னோடா பகுதியில், கடந்த 11ம் ேததி சாலை கட்டுமான பணிகள் நடந்தன. அப்போது, அங்கு கிடந்த செல்போன் ஒன்று உள்ளூர் ேபாலீசாருக்கு கிடைத்தது.

அந்த போனில் இருந்த புகைப்படங்களை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ரஷ்ய இன்வெஸ்டிகேட்டிவ் கமிட்டி (ஐசி) செல்போன் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அத்தனையும் மனித உடலின் நரமாமிச பிண்டங்களின் படங்கள்.

தொடர் விசாரணையில், கிராஸ்னோடா பகுதியின் குடியிருப்பில் உள்ள தம்பதியரின் செல்போன் என்றும், அவர்கள் தான் நரமாமிசம் சாப்பிட்டுள்ளனர் என்பதும் தெரிந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கிராஸ்னோடா பகுதியில் வசிக்கும் நடாலியா பக்‌ஷீலா (43) என்பவர், ஓர் குற்றவழக்கில் கடந்த 15 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையாகி வந்துள்ளார்.

இவரது கணவர் டிமிட்ரி பக்‌ஷீலா (35) என்பவருக்கு, காசநோய் (டிபி) உள்ளது. இவர்கள், நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள்.

தங்களுக்கு எப்போதெல்லாம் நரமாமிசம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் யாரையாவது வீட்டுக்கு வரவழைத்து, அவர்களை கொன்று சமைத்து சாப்பிடுவது வழக்கம். மீதியுள்ள நரமாமிசத்தை பிரிட்ஜில் வைத்து ேதவைப்படும் போது சாப்பிட்டு வந்துள்ளனர்.



மனித உடலின் முக்கிய உறுப்புகளை எடுத்து விரும்பி சாப்பிட்டுள்ளனர். இதற்கிடையே, டிமிட்ரி பக்‌ஷீலாவுக்கு ஹோட்டல் வரவேற்பாளர் எலேனா (35) என்பவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது.

இவர்கள் இருவரும், அவ்வப்போது ‘டேட்டிங்’ செல்வதுண்டு. இதையறிந்த நடாலியா பக்‌ஷீலா, தன் கணவரின் கள்ளக்காதலியை நரமாமிசமாக்கி சாப்பிட வேண்டும்.

அதுவும், தன் கணவன் கையாலே அவளை கொன்று சாப்பிட வேண்டும் என்று திட்டமிட்டார். இந்த திட்டம் யாவும் கணவன் டிமிட்ரி பக்‌ஷீலாவுக்கு தெரிந்தும், அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.


தனக்கு ஏற்பட்ட காசநோய் பாதிப்பால், மனைவி கூறியபடி கடந்த 11ம் தேதி, எலேனாவை ‘டேட்டிங்’ செய்ய தன்னுடைய வீட்டுக்கு அழைத்துள்ளார். அந்த பெண்ணும், தம்பதியர் வீட்டுக்கு வந்ததும் அவரை இருவரும் ேசர்ந்து கொன்று, சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

மீதியான நரமாமிசத்தை பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் வைத்துள்ளனர். எலும்பு, சதை, தோல் என தேவையற்ற பகுதிகளை வீட்டின் அருகில் உள்ள ஆழமான குழியில் வீசிவிடுவர்.

ஏற்கனவே, கடந்த 1990ம் ஆண்டு நரமாமிச வழக்கு ஒன்றில் டிமிட்ரி பக்‌ஷீலாவின் பெயர் உள்ளது. ஆனால், அந்த வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை.



வீதியில் கிடந்த செல்போனில் இருந்த பதிவுகள் தான், இந்த நரமாமிச தம்பதியரை அடையாளம் காட்டி உள்ளது. காசநோயால் பாதிக்கப்பட்ட டிமிட்ரியிடம் இருந்தும் முழு தகவல்களும் பெறமுடியவில்லை.

அவரது மனைவி கொடுத்த வாக்குமூலத்தின்படி, அவர்கள் இதுவரை 30 பேரை கொன்று நரமாமிசம் சாப்பிட்டுள்ளனர். வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, பிரிட்ஜில் இருந்த நரமாமிசம் கள்ளக்காதலி எலேனாவுடையது என்பது உறுதியாகி உள்ளது. தம்பதியரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

30 பேர் யார் யார் என்பது தெரியாததால், ரஷ்ய புலனாய்வு போலீசாருக்கு, இந்த வழக்கு ஒரு சவாலாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நரமாமிசத்துக்கு ஆளானவர்கள்

* கடந்த 1979ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஆவணப்படங்களை தயாரிக்கும் மூவர் அடங்கிய குழுவினர் அமெரிக்க கண்டத்தின் அமேசன் காடுகளை நோக்கி, நரமாமிசம் சாப்பிடுபவர்களைப் பற்றி அறிவதற்காகச் சென்றார்கள்.

ஆனால் இவர்கள் அனைவருமே இந்த ஆதிவாசிகளால் வேட்டையாடப்பட்டனர். அதன்பின் கைப்பற்றப்பட்ட வீடியோ ஆதாரங்களை வைத்துதான், கடந்த 1980ம் ஆண்டு Cannibal Holocaust எனும் பெயரில் திரைப்படம் வெளியிடப்பட்டது.

இப் படத்தில் வன்முறைக் காட்சிகள், கொடூரமான துன்புறுத்தல் காட்சிகள் இருந்தன.


* கடந்த 1971ம் ஆண்டு விபத்திற்குள்ளான உருகுவே நாட்டின் Uruguayan Air Force 571 விமானத்தில் பயணம் செய்த 49 பேரில் எட்டுப் பேர் நரமாமிசம் உண்போரினால் உண்ணப்பட்டார்கள் என்று, உருகுவே அரசாங்கம் அறிவித்துள்ளது.
* கடந்த 2009ம் ஆண்டு இந்தியாவின் கேரளாவின் கொல்லம் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி கப்பல் மூலம் பயணம் செய்த ஐம்பதிற்கும் அதிகமானோர்கள், நரமாமிசம் சாப்பிடும் மனிதர்களால் கொலை செய்யப்பட்டு உணவாக உட் கொள்ளப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

.

மூலக்கதை