புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா இன்று துவக்கம்: முதல்வர் நாராயணசாமி நிகழ்ச்சியில் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா இன்று துவக்கம்: முதல்வர் நாராயணசாமி நிகழ்ச்சியில் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல் முறையாக சர்வதேச திரைப்பட விழா இன்று துவங்கியது. இந்த விழாவை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார். புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் பிக் யுவர் ஃபிளிக் நிறுவனமும்  இணைந்து சர்வதேச திரைப்பட விழாவிற்க்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்த திரைப்பட விழா இன்று துவங்கி வருகிற 30ம் தேதி வரை தொடர்ந்து  5 நாட்களுக்கு  நடைபெற உள்ளது. திரைப்பட விழாவையொட்டி அலியான்ஸ் பிரான்சே, புதுச்சேரி பல்கலைக்கழகம், ஆரோவில் ஆகிய மூன்று மையங்களில் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. மேலும் இந்த விழாவில் 124 பன்மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில் தேசிய விருது பெற்ற டூலெட் என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்பட்டது. மேலும் இந்த சர்வதேச திரைப்பட விழாவின் அறிமுக விழா, புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகில் உள்ள பிரெஞ்சு துணை துாதரகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவில் துணை துாதர் கேத்ரின் சுஆர் மற்றும் முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். இதனை தொடர்ந்து விழாவின் ஒருங்கிணைப்பாளரும், பிக் யுவர் பிலிக் நிறுவனத் தலைவர் அபிஷேக் சின்ஹா, விழா ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் சிலேந்தர் குப்தா ஆகியோரும் உரையாற்றினர். விழாவில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திரைப்படம் திரையிடப்படுவதை தவிர, கலை மற்றும் கலாச்சார கண்காட்சி, உணவு திருவிழா, இசை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தப்படயிருக்கிறது.

மூலக்கதை