பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய அமெரிக்க நகைச்சுவை நடிகர்.... 10 ஆண்டுகள் சிறை

தினகரன்  தினகரன்
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய அமெரிக்க நகைச்சுவை நடிகர்.... 10 ஆண்டுகள் சிறை

வாஷிங்டன்: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய அமெரிக்க நகைச்சுவை நடிகருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்தவர் பில் காஸ்பி காமெடி நடிகரான 81 வயதான இவர் ஹாலிவுட் படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். கடந்த 2004 ஜனவரியில் டெம்பிள் பல்கலைக்கழக பணியாளர் ஆண்ட்ரியா கான்ஸ்டாண்ட் என்பவருக்கு போதைப் பொருள் கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதுகுறித்து ஆண்ட்ரியா போலீசுக்கு அளித்த புகாரின் பேரில் வழக்குப்படிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் இவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் நிரூபணமானதால் பில் காஸ்பிக்கு 3 முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஓ நீல் உத்தரவிட்டார்.

மூலக்கதை