நீதிமன்றங்களில் நடைபெறும் முக்கிய வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
நீதிமன்றங்களில் நடைபெறும் முக்கிய வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: நீத்றங்களில் நடைபெறும் முக்கிய வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களில் நடக்கும் அனைத்து  வழக்குகளையும் நேரலை செய்ய வேண்டும் என இந்திரா தேசிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்தது. அப்போது, “நீதிமன்ற  விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் விவகாரத்தில் எந்த ஆட்சேபணையும் கிடையாது. இந்த திட்டத்தை முதல் கட்டமாக கீழமை நீதிமன்றங்களில் செயல்படுத்தி பார்க்கலாம்’’ எனக்கூறி, இவ்வாறான திட்டத்தை  பாதுகாப்போடும், நவீன தொழில் நுட்பத்தோடும் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. வழக்கின் அனைத்துக்கட்ட விசாரணைகளும் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி முடிந்த நிலையில் தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கிற்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா  தலைமையிலான அமர்வு தீர்பளித்துள்ளது. அதில் சில கட்டுப்பாடுகளுடன் நேரலை செய்ய அனுமதி அளித்துள்ளது. நீதித்துறையின் பொறுப்புணர்வை அதிகரிக்க நேரலை ஒளிபரப்பு உதவும் என்றும் என்னென்ன வழக்குகளை  நேரலை செய்யலாம் என்பதை உச்சநீதிமன்றம் வகுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி அமர்வில் இருந்து நேரலையை தொடங்கலாம் என்றும் நேரலை ஒளிபரப்புக்கான விதிமுறைகளை முறைப்படுத்தவும்,  விதிமுறைகளை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை