அரசு பணி பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டியினருக்கு இடஒதுக்கீடு கிடையாது: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசு பணி பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டியினருக்கு இடஒதுக்கீடு கிடையாது: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு

புதுெடல்லி: மத்திய, மாநில அரசு வேலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கான பதவி உயர்வில், இடஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது என்றும், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பே சரியானது என்றும் உச்சநீதிமன்றம் இன்று காலையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2006ம் ஆண்டு, ‘அரசு வேலையில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவது சரியே’ என்று உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதேநேரம், ‘ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில், மொத்தப் பதவியில் 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பொருளாதார ரீதியாக வசதியாக இருக்கும் உயர் வருவாய்ப் பிரிவினருக்கு இச்சலுகை தரப்படக்கூடாது’ என்றும் வலியுறுத்தியது. அப்போதைய தலைமை நீதிபதி ஒய். கே. சபர்வால், நீதிபதிகள் கே. ஜி. பாலகிருஷ்ணன், எஸ். எச். கபாடியா, சி. கே. தாக்கூர், பி. கே. பாலசுப்பிரமணியன் அடங்கிய அமர்வு, மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.



முன்னதாக, அரசியல் சட்டத்தின் 77, 81, 82, 85வது திருத்த சட்டங்களை ஆட்சேபித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில், அரசியல் சட்டத்தின் அடிப்படையையே இந்த திருத்தங்கள் மாற்றுவதாகவும், அனைவரும் சமம் என்ற அரசியல் சட்டப் பிரிவுக்கு முரணாக இச்சலுகை இருக்கிறது.

அரசு வேலையில் சேர்ந்த பிறகு ஊழியர்கள் அனைவரும் சமமாக பாவிக்கப்பட வேண்டும். சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்குவது மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மனச்சோர்வையும், பணியில் ஈடுபாட்டுக் குறைவையும் ஏற்படுத்தும் என்று மனுதாரர்கள் ஆட்சேபித்தனர்.

ஆனால், இந்த ஆட்சேபங்களை அமர்வு தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து நீதிமன்றம் கூறிய தீர்ப்பில், ஆண்டாண்டு காலமாக அழுத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள் சமூகத்தில் சம அந்தஸ்தைப் பெற, இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியை வழங்கும் கருவியாக இங்கே பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பிட்ட துறையில் அல்லது பதவியில் இப்பிரிவினரின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது என்று அரசு கருதினால், இப்படிப் பதவி உயர்வின் மூலம் இப் பிரிவினரை நியமித்துக் கொள்ள அரசுக்கு உரிமை இருக்கிறது. அந்தந்த மாநிலங்களின் நிலைமைக்கு ஏற்ப இதை முடிவு செய்யலாம்.

அப்படிச் செய்யும்போது யாராவது தங்களுக்கு பாதிப்பு நேரிட்டுவிட்டதாகக் கருதினால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம். நிர்வாகத் திறனையும் அரசு மனதில் கொண்டு இச்சலுகையை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்தது.

தொடர்ந்து, மேற்கண்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, மத்திய அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தீர்ப்பை கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி ஒத்திவைத்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், அரசுப்பணிகளில் இடஒதுக்கீட்டு முறையை, ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பே செல்லும்.

அரசுப்பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.

.

மூலக்கதை